வன்னி மாவட்டத்தில் 165 பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள்!





வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 165 பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைப்பு.

வன்னியின் வசந்தம் எனும் குறிக்கோளை நோக்கி பயணிக்கும் எமக்கு இது வலுச்சேர்க்கும். காதர் மஸ்தான்

திமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வறுமையற்ற இலங்கை என்ற எண்ணக்கருவிற்கு ஏற்ப சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்ப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுநர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த நேர்முகப் பரீட்சைக்கு தோற்றி தெரிவு செய்யப்பட்ட 165 பயநாளர்களுக்கான நியமனங்கள் முதற்கட்டமாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 42 பயிலுநர்களுக்கும், வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 69 பயிலுநர்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 54 இளைஞர் யுவதிகளுக்குமான நியமன கடிதங்களை பாராளுமன்ற உறுப்பினர் #காதர் #மஸ்தான் அவர்களின் கோரிக்கையினை அடுத்து ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டது. நியமனம் பெறுவோருக்கு அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பத்தின் பேரில் இனங்காணப்பட்டுள்ள 25 துறைகளின் கீழ் 6 மாதங்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
தேசிய பயிலுநர் மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை இப்பயிற்சி வேலைத்திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ளது. பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பயனாளர்களுக்கு NVQ-3 தரச்சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சி காலத்தின் போது பயிலுநர்களுக்கு 22500/= ரூபாய் மாதாந்த கொடுப்பணவு வழங்கப்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

குறைந்த வருமானத்தை அதிகரித்து சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி வறுமையை ஒழித்தல், வருமான ஏற்றத்தாழ்வினை முடியுமான அளவு சமப்படுத்தி மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் கட்டம் கட்டமாக அரசினால் வழங்கப்படும் இந்த நியமனம் நாடுபூராகவும் வெகுவிரைவில் ஒரு இலட்சம் பேருக்கும் வழங்கி வைக்கப்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :