இன்று சர்வதேசசிறுவர்தினம்: பாடசாலைகளில் 2ம் 5ம் திகதிகளில்! 'எங்கள் நாடு எங்கள் கைகளில்' என்பது தொனிப்பொருள்.


காரைதீவு சகா-

ன்று(1) சர்வதேச சிறுவர் தினமாகும். சர்வதேச முதியோர்தினமும் இன்றாகும்.

'எங்கள் நாடு எங்கள் கைகளில்' எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டு சர்வதேசசிறுவர்தினக்கொண்டாட்டம் நடைபெறவிருக்கின்றது.

மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சினால் வெளியிடப்பட்ட மேற்படி தொனிப்பொருளில் இன்று 1ஆம் திகதி சர்வதேச சிறுவர்தினத்தை பாடசாலைகளிலும் பலவேலைத்திட்டங்களை முன்னெடுத்து கொண்டாடவேண்டும் என கல்வியமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது.

1ஆம் திகதி விடுமுறை தினமாகவிருப்பதால் பாடசாலைகளில் எதிர்வரும் 2ஆம் 5ஆம் திகதிகளில் இந்நிகழ்வுகளை சுகாதாரநடைமுறைவிதிகளுக்கமைவாக நடாத்தவேண்டும் என கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீகே பெரேரோ அறிவித்துள்ளார்.

சிறுவர்தின தொனிப்பொருள் அடங்கிய பதாதைகளை காட்சிப்படுத்தல் கொரோனாப்பாதுகாப்பு தொடர்பிலும் தொனிப்பொருளுக்கமைவாக மாணவர்மத்தியில் அவர்களது ஆக்கத்திறன் மற்றும் அழகியல்திறன்களை மேம்படுத்துமுகமாக குறுநாடகம் வாத்தியஇசை பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நடாத்தலாம்.

பாடசாலைகளில் அக்.2ஆம் திகதி காலைக்கூட்டத்தில் ' எங்கள்நாடு எங்கள் கைகளில்' என்ற தொனிப்பொருளில் நிகழ்ச்சிகளை நடாத்துதல் வேண்டும்.

இத்தொனிப்பொருளுக்கமைவாக ஆக்கங்களை பாடசாலைசுவர்களிலும் அறிவித்தல்பலகைகளிலும் காட்சிப்படுத்தப்படவேண்டும். பாடசாலைச்சிறுவர்களை போதைப்பொருள்பாவனையிலிருந்து பாதுகாத்தல் தொடர்பில் பெற்றோருக்கு அறிவூட்டம் செய்தல் ஆரோக்கியமான உணவுகளை உள்ளெடுத்தல் தொடர்பிலும் விழிப்புணர்வூட்டப்படல்வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :