இலங்கையில் 35000 பேர் சுய தனிமைப்படுத்தலில்!



J.f.காமிலா பேகம்-
லங்கையில் தற்போது 35 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமூகத்தில் தொற்றுநோய் விரைவாகப் பரவுவதால் பொது மக்கள் தீர்க்கமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவெளை மொரட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரி்சோதனையை அடுத்து 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
பேலியகொடை மீன் சந்கையில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை இனங்கண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த பரிசோதனையின் பின்னரே மொரட்டுவ பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அத்தோடு பொரளையில் 20 பேருக்கும், கொட்டாஞ்சேனையில் 44 பேருக்கும், மட்டக்குளியில் 36 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தொற்று நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்ற வளாகம் இன்று திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டவுள்ளது.

அதன்படி நேற்றும் (27) நேற்று முன்தினமும் (26) பாராளுமன்ற வளாகம் முற்றும் முழுதாக தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றின் செயற்பாடுகள் வழமைபோல் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், தற்போது நாடு முழுவதிலும் கொவிட் 19 நோய்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 870 ஆக பதிவாகியுள்ளது.
அத்தோடு இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 19 ஆக பதிவாகியுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :