425 கோடி மதிப்புள்ள நவீன கழிவறை சர்வதேச விண்வெளி நிலையம் சென்றது!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-


மெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத கழிவறையொன்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது.

தற்போது பரிசோதனை நோக்கத்தில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ள இந்த கழிவறை எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசாவால் பயன்படுத்தப்படலாம்.

பூமியிலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகள் அனுப்பப்படும் பொழுது $23 Million ( சுமார் 425 கோடி ரூபாய் ) மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கழிவறையும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு முந்தைய கழிவறை மாதிரிகளை போலில்லாமல் இந்த கழிவறை பெண் விண்வெளி வீரர்களுக்கு எளிமையானதாக இருக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில், மனித உடலிலிருந்து கழிவுகளை உறிஞ்சி எடுக்கும் வகையில் இந்தக் கழிவறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி வீரர்களின் தனியுரிமை கருதி, பூமியில் இருக்கும் ஒரு பொதுக் கழிவறையைப் போலவே இந்தக் கழிவறையும் சுற்றிலும் மூடப்பட்டிருக்கும்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான கருவிகளை கொண்டு செல்லும் கலன் வியாழனன்று ( நேற்று முன் தினம் ) அமெரிக்காவின் வேர்ஜினியாவின் வாலோப்ஸ் ( Wallops ) தீவிலிருந்து ஒரு ரொக்கெட் மூலம் புறப்படவிருந்தது.

எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது புறப்பட இருந்ததற்கு 3 நிமிடத்துக்கு முன்னர் இத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

பொருட்களை சுமந்து செல்லும் இவ் விண்கலத்துக்கு இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையை போற்றும் வகையில் S.S கல்பனா சாவ்லா என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறுகள் முற்றிலும் சரி செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை ( நேற்று ) மாலை இவ் ரொக்கெட் கிளம்பியது.

எதிர்வரும் 5ம் திகதி, திங்கள்கிழமை இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்று சேருமென்று நாசா தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :