இன்று நடந்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடகவியலாளர் மாநாடு விபரம்!


அஷ்ரப் ஏ சமத்- 

திா்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பிணா் றிசாத்பதியுத்தீன் கைது தொடா்பாக அவா் முன்வைத்த மேல் நீதிமன்றில் வழக்கு நடைபெறவுள்ளது. 

நீதிமன்ற நீதிபதிகளினால் வழங்கப்படும் எந்தத் தீா்ப்புக்கு அவா் தலைசாய்ந்து அதன் படி அவா் வெளியில் வருவாா். கடந்த காலத்தில் ரவி கருநாயக்கவின் கைதுக்கும் அதே போன்று குருநாகலில் கட்டிடமொன்றை சேதமாக்கிய குருநாகல் மேயர்க்கும் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பினை கருத்திற் கொள்ள வேண்டும்.

இதனைவிடுத்து சட்டமா அதிபா் ஒரு வித்தியசமான கைதினை ஊடகங்கள் ஊடாக விடுத்து முன்னாள் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் மீது பிழையான தகவல்கள் தினிக்கப்பட்டு அவரை மக்கள் மத்தியில் ஒரு பாரிய குற்றமிழைத்தவா் போன்று காட்டுகின்றாா். றிசாத் பதியுத்தீன் கடந்த காலங்களில் 20க்கும் மேற்பட்ட சி.ஜ.டி யினா்களது விசாரனைகளை முன்னெடுத்தவா் அவா் ஒரு போதும் ஓடி ஒழியவில்லை. ஆனால் இம்முறை சட்டமா அதிபா் றிசாத்பதியுத்தீன் கைது ஒரு வித்தியசமான முறையில் சி.ஜ.டி களை ஏவி அவா் உறவினா்கள் நண்பா்கள் என பல சிக்கள்களை ஏற்படுத்தியுள்ளாா்.


மேற்கண்டவாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசி்ன பிரதித் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான என். எம். சகீட் ்இன்று 18.10.2020 வெள்ளவத்தையில் உள்ள சுபுன் கட்டிடத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தாா். இம் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பிணா் முஸராப் , முன்னாள் பிரதியமைச்சா்் எஸ்.எஸ் அமீர் அலி , கட்சியின் செயலாளா் சுபைதீன் ஹாஜியாா். ஹுனைஸ் பாருக் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பிணா் பாயிஸ் ஆகியோறும் இ்ம் மாநாட்டில் பங்கு பற்றினாா்கள்.

தொடா்ந்து கருத்து கூறிய சட்டத்தரணி என்.எம். சகீட்

றிசாத் பதியுத்தீன் வா்த்தக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் புத்தளத்தில் இடம் பெயா்ந்தவா்களுக்கான ஒரு ஸ்தாபணம் அவரது அமைச்சின் கீழ் இருந்தது. அம் மக்களை வன்னிக்குச் சென்று வாக்களிப்பதற்காக 11 ஆயிரம் மக்களை வன்னிக்குச் கொண்டு செல்ல இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களை வாடகைக்கு அமைப்பதற்காக பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தாா். 

அதனை பிரதமா் ஏற்று அனுமதி வழங்கப்பட்டு நிதியமைச்சா் மங்கள சமரவீரவின் அனுமதியுடன் அப்பணம் அவரது அமைச்சின் ஊடாக இன்னுமொறு அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கே அப் பணம் வழங்கப்பட்டது. மீண்டும் 6 நாட்களுக்கு அப்பணத்தினை பதியப்பட்ட ஒர் இடம்பெயா்ந்த அமைப்பு அதனை மீள செலுத்திவிட்டது. இதில் எவ்வாறு றிசாத் பதியுத்தீன் அரச பணத்தினை கையாடினாா் என்று அரச சட்ட மா அதிபா் அவா் மீது சேறு பூசுகின்றாா். அவா் ஒவ்வொறு விதமாக வித்த்தியமான சட்டத்தினை திணித்து வருகின்றாா். 

சட்டா மா அதிபா் முன்னாள் அமைச்சா் ரவி கருநாய்ககவினை கைது மற்றும் குருநாகல் மேயர் கைதுக்கும் நீதிமன்றம் வழங்கி தீர்்ப்பின் படி அவா்கள் கைது செய்யாமல் தொடா்ந்து நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இதனை அவரது சட்டத்தரணிகள் ஆலோசனையின் படி அவா் 20 திகதிய நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அவா் தலைமரவாமல் வெளியில் வருவாா் என சட்டத்தரணி என். எம். சகீட் தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :