தோட்டப்பகுதிகளுக்கும் கொரோனா பரவும் அபாயம்' - பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார் வேலுகுமார் எம்.பி.



" நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் தோட்டப்பகுதிகளுக்கும் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தேவையான சுகாதார ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்." - என்று என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.

அத்துடன், கொவிட் - 19 தாக்கத்தால் புபுரஸ்ஸ, லெவலன்ட் தோட்டத்திலுள்ள நிவ்போரஸ்ட் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 28 குடும்பங்களுக்குமேல் வாழ்கின்றன. எனவே, அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட வினாவொன்ற எழுப்பி கருத்து வெளியிட்ட வேலுகுமார் எம்.பி., இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

" கண்டி மாவட்டத்தில், தொழுவ பிரதேச செலயகத்துக்குட்பட்ட லெவலன்ட் தோட்டத்தில் நிவ்போரஸ்ட் பிரிவு 'லொக்டவுன்' செய்யப்பட்டுள்ளது. ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் இருவருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இத்தோட்டத்தில் சுமார் 28 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
கொவிட் - 19 முதல் அலையின்போது தோட்டப்பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படவில்லை. எனினும், தற்போது எச்சரிக்கைநிலை உருவாகியுள்ளது. தோட்டப்பகுதிகளில் உரிய சுகாதார ஏற்பாடுகளும் இல்லை.

எனவே, இது தொடர்பில் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதா, தோட்டப்பகுதிகளில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றனர். 'லொக்டவுன்' செய்யப்பட்டால் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதா"- என்றார்.
இதற்கு சுகதார அமைச்சின் சார்பிலோ அல்லது பெருந்தோட்டத்துறை அமைச்சின் சார்பிலோ உரிய பதில் வழங்கப்படவில்லை. மாறாக 'மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள்' செய்துகொடுக்கப்படும் என்று ஆளுங்கட்சி பிரதமகொறடா ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ சமாளிப்புபோக்கில் பதிலளித்தார்.




































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :