மாளிகைக்காடு அரிசி ஆலைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானை..!

காரைதீவு சகா-

ண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது.

காரைதீவுப் பிரதேசத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராமத்துள் நள்ளிரவில் புகுந்த யானைகள், அங்கிருந்த அரிசிஆலையை பதம்பார்த்தது.

சுமார் ஜந்து யானைகள் ,இவ்வாறு நள்ளிரவில் வந்து பாரிய சேதத்தை விளைவித்தபின்னர் விடிந்தபின்னரும் அப்பகுதியில் நின்று வயல்வழியாக நகாந்துசென்றன.

இதனால் இரவானதும் மக்கள் அச்சத்திலுள்ளனர். ஒரு பக்கம் கொரோனா, மறுபக்கம் டெங்கு ,அதற்கிடையில் யானை .மக்கள் விரக்தியில் வாழ்க்கையை கடத்துகின்றனர்.

யானைகள் அரிசிஆலையின் முன் வாயில்கதவை இடித்துத்தள்ளிவிட்டு உள்ளேசென்று அரிசிமூடைகளை இழுத்துவந்து நன்றாக உறிஞ்சின. பின்னர் அவை அரிசிஆலை சூழலிலுள்ள இளம் தென்னைமரங்களை புரட்டிஎடுத்தன.

குலைகட்டி தேங்காய் பறிக்கும் தருணம் இந்தயானைகள் அங்கிருந்த தென்னப்பிள்ளைகளின் குருத்தை பிடுங்கி உண்டதோடு மரத்தையும் சாய்த்துவிட்டுச்சென்றுள்ளன.
அருகிலுள்ள கடையையும் உடைத்து சேதப்படுத்தியது.
அண்மையில் மல்வத்தையில் ஓய்வுநிலை அரசஊழியரொருவரை அடித்துக்கொன்றது தெரிந்ததே.

இவ்வாறான சேதப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்துகொண்டுபோகின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் விசனத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :