கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் மீற்றரான வாழ்க்கை வேலைத்திட்டம் முன்னெடுப்பு.


எப்.முபாரக் -

திருகோணமலை மாவட்டத்தில் மீற்றர்ரான வாழ்க்கை வேலைத்திட்டம் இன்று(29) திருகோணமலை பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களம்,இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பொலிஸாரும் இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்கள்.

"தும்மல் இருமல் வந்தால் உள்முழங்கையை பாவித்திட நல்ல மீற்றறாய் வாழ்வோம் எனும் தொனிப்பொருளில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலும் பயணிகள் பஸ் வண்டிகள்,வங்கிகள் மற்றும் பொது இடங்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இந்நிகழ்வில் திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகார் எம்.ஏ.உதய கேமந்த,திருகோணமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த ராசபக்ச,இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி ரவிக்குமார் பொலிஸார் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :