சஜீத்தின் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அ.இ.ம.காங்கிரஸ் முஷாரப் -நடந்தது என்ன?

இர்ஷாத் ஜமால்-

க்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளான மு.காங்கிரஸ், அ.இ.ம.காங்கிரஸ் மற்றும் த.மு.போ.கூட்டணி ஆகிய கட்சிகளின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள், 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆதரவாக வாக்களித்த குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக அவர்களது தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தலைவர்களையும் எதிர்க் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க் கட்சிக்குள் வலுப்பெற்று வருகின்றது.

கடந்த 23ம் திகதி சஜித் பிரேமதாச தலைமையில் நடை பெற்ற கூட்டத்திற்கு, ரவூப் ஹக்கீம், ரிஷாட் மற்றும் அவரது கட்சியின் உறுப்பினர் முஷாரப் ஆகியோர்கள் மாத்திரம் அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த கூட்டத்தில், இரட்டைப் பிரஜாவுரிமைக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பில் எழுந்த வாக்கு வாதத்தின் போது முஷாரப் எம்.பி வெளி நடப்புச் செய்திருந்தார்.

கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட அரவிந்த குமாரை, கட்சியின் அனைத்துச் செயட்பாடுகளில் இருந்தும் நீக்கியுள்ளது த.மு.போ கூட்டணி.

தலைவரின் ஆசிர்வாதத்துடன் தான் நாம் 20ஐ ஆதரித்தோம். இல்லை எனின் த.மு.போ கூட்டணி அரவிந்த குமாரை கட்சியில் இருந்து நீக்கியதை போன்று, எம்மையும் எமது கட்சி நீக்கி இருக்கும். அதற்கான அதிகாரத்தை கட்சியின் யாப்பு வழங்கி உள்ளது எனத் தெரிவிக்கின்றனர் மு.காவின் உறுப்பினர்கள். அ.இ.ம. காங்கிரஸின் தலைவர் விளக்க மறியலில் உள்ளதால், அக்கட்சி சார்பில் எந்த முடுவும் இதுவரை எடுக்கப்பட்ட வில்லை. இருந்தும், குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி தகுந்த நடவடிக்கையை எடுக்கும் என கூறியுள்ளார் முஷாரப் எம்.பி.

நிலைமை இவ்வாறு இருக்க, நேற்றைய தினம் (29) எதிர்க் கட்சியினால் சபாநாயகர் அவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் 20 ஐ ஆதரித்து வாக்களித்த உறுப்பினர்களுக்கு ஆளும் தரப்பு வரிசையில் ஆசனம் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அரவிந்த குமார், டயானா கமகே, ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நசீர், தொளபீக், இஷாக் ரகுமான், அலி சப்ரி ரஹீம் அகியோர்களுடன், 20ஐ எதிர்த்தும், இரட்டை பிரஜாவுரிமையை ஆதரித்தும் வாக்களித்த அ.இ.ம.காங்கிரஸின் உறுப்பினர் முஷாரப் அவர்களது பெயரும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது,"சஜித் பிரேமதாச ஒரு சிறு பிள்ளை. அவர் ஒரு பால் போத்தல்" என தே.காங்கிரஸின் தலைவர் ஏ.எல். அதாவுல்லா விமர்சித்திருந்தார்.

எதிர்க் கட்சித் தலைவரது குறித்த இச்செயற்பாடு உற்பட அவரது அண்மைக்கால செயற்பாடுகள் அதாவுல்லாவின் விமர்சனத்தை மெய்ப்பிக்கும் வகையிலே உள்ளது .

தேசியப் பட்டியல் பகிர்வு தொடர்பில் கூட்டுக் கட்சிகளுடன் செய்து கொண்ட உடண்படிக்கை மீறலில் அவரது போதிய அரசியல் அனுபவ இன்மை வெளிப்பட்டிருந்தது.

தமது பட்டியல் உறுப்பினரின் பெயரை மாத்திரம் குறிப்பிட்டே, அக்கடிதம் அனுப்பபட்டிருக்க வேண்டும். ஐ.ம.சக்தியில் போட்டி இட்ட பிற கட்சி உறுப்பினர்களின் பெயரை உள்ளடக்கியத்தில் பிரச்சினையும் இல்லை. ஆனால் அ.இ.ம.காங்கிரஸில் போட்டி இட்ட முஷாரப் மற்றும் ஐ.மு.ச.கூட்டணியில் போடி இட்ட அலி சப்ரி ரஹீம் ஆகியோர்களது பெயரை குறிப்பிட்ட எந்த அதிகாரமும் சஜித் பிரேமதாசாவுக்கு இல்லை. இந்த விடயம் தெரியாமலா அவர் உள்ளார்? என்ற வினா எழுகின்றது.

ஆதரவு தெரிவித்த உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, அவர்கள் எதிர்க் கட்சியில் இருந்து நீக்கப் பட்டுள்ளனர். எனவே எதிர்வரும் அமர்வுகளின் போது எதிர்த்தரப்பில் ஆசனம் வழங்க முடியாது. அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு சபாநாயகரை கோரி இருந்திருந்திருக்கலாம். அல்லது குறித்த கட்சிகளின் செயலாளர்களுக்கு கட்சியின் தீர்மானத்தை எழுத்து மூலம் அனுப்பி இருக்கலாம். இவ்விரு சந்தர்ப்பத்திலும் தான் ஒரு அனுபவம் உள்ள அரசியல் தலைவர் என்பதை நிரூபிக்க தவறியுள்ளார் சஜித் அவர்கள்.

உண்மையில், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு வழங்கியது, அரசியலில் பதிவான முதல் நிகழ்வு அல்ல. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஆளும் தரப்பிற்கும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர் தரப்பிற்கு தாவுவது அரசியலின் அவ்வப்போது நிகழும் சுவாரஷ்யமாகும்.

அரசுக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களுக்கு ஆளும் தரப்பில் ஆசனம் வழங்கி அவர்களை அரவணைத்து, ஆசிர்வதித்து, முழு அமைச்சு, அரை அமைச்சு என்று இன்னும் பல சுகபோகங்களை வழங்குவது அரசியலின் எழுதா விதியாகிவிட்டது. இதற்காக விசேட கோரிக்கைகளை யாரும் முன்வைப்பதும் இல்லை.

அவ்வாறான கோரிக்கையை

சஜித் பிரேமதாச அவர்களே முதல் முதலில் முன்வைத்துள்ளார். இது அவர் அரசியலில் இன்னும் வளர்ச்சி காண வேண்டும் என்பதை காட்டுகின்றது.

20 ஐ எதிர்த்து வாக்களித்த அ.இ.ம. காங்கிரஸின் உறுப்பினர் முஷாரப் அவர்களது பெயரையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பது, அதாவுல்லாவின் விமர்சனத்தை உண்மைப் படுத்துகின்றது.

முஷாரப் எம்.பி, ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டி இட்டு வெற்றி பெற்றவர் அல்ல. அ.இ.ம.காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அவர். தனது கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தாத ஒருவருக்கு எதிராக முடுவு எடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்பது கூடவா எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியாமல் போயுள்ளது?.
தனது கட்சியின் பட்டியல் உறுப்பினர் டயானா கமகே அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைக்கத்தவரிய சஜித் அவர்கள், அதே குற்றத்தை செய்த அடுத்த கட்சியின் தலைவர்களை எப்படி விமர்சிக்க முடியும்?. எப்படி அத்தலைவர்களை கட்சியில் இருந்து நீக்க முடியும்?. 

நீக்குவதாயின் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியை வகிக்கும் சஜித் அவர்களையும் சேர்த்தல்லவா நீக்க வேண்டும்?. அவ்வாறு நிகழுமாயின் சஜித் எந்தப் பக்கம் போய் அமர்வார்?.

குறித்த உறுப்பினர்கள் தொடர்பில் முடிவு எடுக்கும் முழு அதிகாரம் அவர்களது கட்சிகளுக்கே உள்ளது. அவர்கள் விரும்பும் பட்சத்தில் அரசோடு இணைந்து, ஆளும் தரப்பு வரிசையில் அமரவும் முடியும் அல்லது, சுயாதீனமாக இயங்கவும் முடியும். இதற்கான கோரிக்கையை விடுக்கும் அதிகாரமும் தேவையும் அவர்களுக்கு உள்ளதே தவிர, எதிர்க்கட்சி தலைவருக்கு அல்ல என்பதே உண்மை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :