கிழக்கு மாகாண ஆளுணர் நிந்தவுர் ஹைரு நிறுவனத்திற்கு விஜயம்..


எம்.ஐ.எம்.அஸ்ஹர்-


கிழக்கு மாகாணத்தில் ஹைர் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் தொழிற்சாலைகள் மற்றும் எதிர்காலத்தல் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய தொழில் முயற்சிகளை நேரடியாக பார்வையிடும் வகையில் கிழக்கு மாகாண ஆளுணர் அனுராதா யஹம்பத் அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது இந்த நிறுவனத்திற்குரிய உயிரியல் வாயு தொழிற்சாலை , ஆழ்கடல் மீன்பிடிப் படகு தொழிற்சாலை , உல்லாச ஹோட்டல் , மீனவர் பயிற்சி நிலையம் , சேதனை பசளை தயாரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட உயிர்வாயு மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார நிலையம் என்பவற்றையும் பார்வையிட்டார்.

இந்த மின்சார உற்பத்தி நிலையம் மூலம் தேசிய மின் உற்பத்திக்காக 2.5 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது விசேட அம்சமாகும். இத்தொழிற்சாலைகள் மூலம் கிழக்கு மாகாணத்ததைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் , எதிர் காலத்தில் மேலும் பலருக்கு தொழில் வாய்ப்பினை வழங்க முடியும் எனவும் விஜயத்தின் இறுதியில் தொழிற்சாலை முகாமைத்து பணிப்பாளருக்கும் ஆளுணருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :