ஊடகத்தின் அவசியத்தை தலைவர்கள் உணர்வார்களா ?

முகம்மத் இக்பால், 
சாய்ந்தமருது-

டகத்தின் அவசியத்தை தலைவர்கள் உணர்வார்களா ? இனவாதிகளின் பிரச்சாரங்களை முறியடிக்கும் ஆற்றல் எம்மிடம் உள்ளதா ?

இஸ்லாத்துக்கு எதிராகவும், இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து வருகின்ற சர்வதேச யூத சார்புடைய ஊடகங்களின் போலி பிரச்சாரத்தினை முறியடிக்கும் நோக்கில் சர்வதேச தொலைக்காட்சி அலைவரிசையினை ஆரம்பிக்க மூன்று இஸ்லாமிய நாட்டு தலைவர்களினால் கடந்த வருடம் தீர்மானம் எடுக்கப்பட்டது.

உலகம் முழுவதிலும் இஸ்லாமியர்கள் மத்தியில் ஊடக பலயீனம் காணப்படுகின்றமையே இந்த தீர்மானம் மேற்கொள்வதற்கு காரணமாகும்.

இதனை அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் தவிர்ந்த, அந்நாடுகளில் வாழ்கின்ற சாதாரண அரபு மக்கள் மத்தியிலும், உலகின் ஏனைய இஸ்லாமிய மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பினை பெற்றிருந்தது.

துருக்கி, பாகிஸ்தான், மலேசியா போன்ற நாடுகளின் தலைவர்களான முறையே எர்டோகான், இம்ரான்கான், மஹதீர் முஹமத் ஆகிய மூன்று தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகள் அனைத்தும் இஸ்லாம் பிறந்த மண்ணின் ஆட்சியாளர்களினால் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

அரபு தலைவர்கள் அமெரிக்காவுடன் வெளிப்படையாகவும், சியோனிஸ்டுக்களுடன் மறைமுகமாகவும் மேற்கொண்டுவருகின்ற உறவுகளை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் இதற்கு காரணமாகும்.

நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் சியோனிச யூதர்களினால் இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துக்களை பரப்புவது மட்டுமல்லாது முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கின்ற நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.

உலகில் பல நாடுகளில் பெரும்பான்மை அரசுகளினால் அடக்கப்பட்டு உரிமை இழந்த முஸ்லிம்கள் தங்களது உரிமைக்காகவும், ஒடுக்கப்பட்ட விலங்கினை உடைத்தெறிய போராடுகின்ற அனைத்து இஸ்லாமிய போராட்ட இயக்கங்களும் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கப்படுகின்றன.

அத்துடன் உலக வல்லரசுகளுக்கு அடிமைப்பட்டு இஸ்லாத்துக்கு முரணாக ஆட்சி செய்கின்ற பொம்மை ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடி இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க முயற்சிக்கின்ற போராளிகளும் பயங்கரவாதிகளாகவே கான்பிக்கப்படுகின்றார்கள்.

இந்த செயல்பாடுகளை சர்வதேச பிரபலமான ஊடகங்கள் மிகவும் தந்திரமாகவும், மதிநுற்பமாகவும் செயலாற்றி வருகின்றது.

சில நாடுகளில் தங்களது கைகளைக்கொண்டு தங்களது கண்களை குத்துவது போன்று எம்மவர்களைக்கொண்டே எமது சமூகத்தினர்கள் பயங்கரவாதிகள் என்ற போர்வையில் கொலை செய்யப்பட்டு வருகின்றார்கள்.

இன்று சர்வதேச ரீதியில் இயங்குகின்ற ஒவ்வொரு ஊடகங்களும் ஏதோ ஒருவகையில் தங்கள் இனத்துக்காகவும், மொழிக்காகவும், சமயத்துக்காகவும் அல்லது பணத்துக்காகவும் இயங்கி வருவதுடன், முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றன.

அந்தவகையில் ராய்டர், CNN, BBC போன்ற சர்வதேச ஊடகங்கள் அமெரிக்க வல்லாதிக்கத்தையும், யூத பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்துவதோடு இஸ்லாமிய போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதிலும், இஸ்லாமிய உலகை தொடர்ந்து பிளவுபடுத்தி வைத்திருப்பதனையும் கவனமாக கையாள்கின்றது.

அதுபோன்று எமது நாட்டிலும் முஸ்லிம் சமூகத்துக்கு உள்ள பிரச்சனைகளையும், உண்மைகளையும் சிங்கள மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் எடுத்துக்கூறும் விதத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் முஸ்லிம்களின் குரலாக செயல்படுகின்ற ஊடகம் ஒன்றின் அவசியம் மிக முக்கியமானது.

தேர்தல் வெற்றிக்காகவும், பகட்டுக்காகவும், பதவிக்காகவும், பணத்துக்காகவும் அலைந்து திரிகின்ற எமது அரசியல்வாதிகளிடமிருந்து இதனை எதிர்பார்க்க முடியாது.

எமது சமூகத்தில் எத்தனையோ பணம் படைத்தவர்கள், சமூக ஆர்வமுள்ள சர்வதேச தொடர்பாளர்கள் இருந்தும் இவ்வாறான விடயங்களில் ஆர்வம் காட்டாதது கவலையான விடயமாகும்.

எனவே ஊடகத்தின் முக்கியத்துவத்தினை உலக தலைவர்கள் உணர்ந்தது போன்று எமது நாட்டில் உள்ள தலைவர்களும், பணம் படைத்தவர்களும் உணரவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :