திருமதி நஜீபா அமீர் ஹம்ஷா வுக்கான பிரியாவிடை வைபவம்



எஸ்.எம்.ஜாவித்-
ளுத்துறை முஸ்லிம் பாலிகா மகாவித்தியாலயத்தில் கடந்த 29 வருடகாலமாக அதிபராக இருந்து சேவையாற்றிவிட்டு ஓய்வு பெற்றுச் செல்லும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி நஜீபா அமீர் ஹம்ஷா வுக்கான பிரியாவிடை வைபவம் நேற்று (01) பாடசாலையின் வளாகத்தில் பாடசாலையின் புதிய அதிபர் திருமதி பாத்திமா ஷபீ அலவியின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக களுத்துறை மாவட்ட வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி ஓ.எம்.வி.முதலிகேயும் கௌரவ அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதியமைச்சருமான அலி ஸப்ரியும் கலந்து கொண்டனர். விஷேட பேச்சாளர்களாக ஜமியா நளீமியாவின் பிரதிப்பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மட்ட, வைத்தியர் ருஷ்தா ரூமி உள்ளிட்ட பல அதிதிகளும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலையின் சகல பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலையின் நலன் விரும்பிகள் எனப் பெருந்திரலானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி நஜீபா அமீர் ஹம்ஷாவுக்கு அவரின் சேவையைப் பாராட்டி அமைச்சரினால் விஷேட நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலைச் சமுகத்தினால் மேலும் பல நினைவுச் சின்னங்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு பொன்னாடையும் போர்த்தி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :