கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பும் இடப்பற்றாக்குறையும்!


J.f.காமிலா பேகம்-

மினுவங்கொடை கொரோனா தொற்றாளர் கொத்தணி தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற நிலையில் இலங்கையில் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் , உள்ள படுக்கை வசதிகள் நிறைந்துவருவதனை கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் காண்பிக்கின்றன.

மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இருந்து இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் எவரும் இதுவரை அதி தீவிர சிசிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தால் இதுவரை வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் படி கொரோனா தொற்றுக்குள்ளானதாக இலங்கையில் 5,475 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் தற்போது 2,067 பேர் வைத்தியசாலைகளில் சிசிச்சை பெற்றுவருகின்றனர் .

கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் படி இலங்கையில் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் 19 சிகிச்சைநிலையங்களிலுள்ள படுக்கைகளின் மொத்த எண்ணிக்கை 2075 ஆக உள்ள நிலையில் இன்னமும் சில தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டாலேயே படுக்கைகள் நிறைந்துவிடும் என்பதை தரவுகள் உணர்த்துகின்றன.

இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் குளோப் தமிழுக்கு வழங்கிய விரிவான நேர்காணலின் போது சமுதாய மருத்துவ சிறப்பு நிபுணர் டொக்டர் முரளி வல்லிபுரநாதன், இலங்கையில் சமூகப்பரவல் ஏற்பட்டு நாடெங்கிலும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் இடத்து இலங்கையின் வைத்திய சாலைக் கட்டமைப்பால் அதற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :