திருகோணமலை மாவட்ட அரசா அதிபர் அசங்க அபேவர்தன அரச சேவையிலிருந்து ஓய்வு.

எப்.முபாரக்-

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இன்று 30 வருட அரச சேவையின் பின்னர் ஓய்வு பெற்றார்.

இதனை முன்னிட்டு மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.2020.02.14ம் திகதி முதல் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இவர் குறுகிய காலத்தில் மாவட்ட மக்களுக்கு இன , மத, மொழி வேறுபாட்டின்றி அளப்பறிய சேவையை வழங்கியுள்ளார்.

மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு மக்களது உரிய பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைப்பதிலும் அதேபோன்று உரிய திணைக்களங்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்தும் செயற்படுவதில் வல்லவராக இவர் காணப்பட்டமை விசேட அம்சமாகும்.

1991.04.19ம் திகதி இலங்கை நிர்வாக சேவைக்குள் இணைந்த இவர் லாஹுகல,தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளராகவும் லாஹுகல பிரதேச செயலாளராகவும்,அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றினார்.பின்னர் கடற்றொழில் மற்றுமர நீரியல் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளராகவும் கிழக்கு மாகாண கல்வியமைச்சு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராகவும் அரசாங்க அதிபராக பதவியேற்க முன்னர் சேவையாற்றுயமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :