அம்பாறை அரச அதிபரின் கொரோனா குறித்த பொதுமக்களுக்கான கட்டாய அறிவிப்புக்கள்!

காரைதீவு சகா-
ன்றுமுதல் இருவாரங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் முகக்கவசமின்றி நடமாடத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியேறும்போது முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.

அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல்.திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற கொவிட்19 பாதுகாப்புதொடர்பான அவசர விசேட மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டம் நேற்று(09) மாலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மேலதிகஅரச அதிபர் வே.ஜெகதீசன் இராணுவத்தின் 24வது படைப்பிரிவு கட்டளைத்துறை அதிகாரி திலக்வீரக்கோன் கல்முனைப்பிராந்திய சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் குண.சுகுணன் அம்பாறை சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் பி.சேரசிங்க மற்றும் பிரதேசசெயலாளர்கள் போக்குவரத்துதுறை அதிகாரிகள் அனர்த்தமுகாமைத்துஅதிகாரி உள்ளுராட்சிஉதவிஆணையாளர் மதத்ததலைவர்கள் ஆகியோர் கலந்தகொண்டனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களாவன:

இன்று முதல் சகல ரியுட்டரிகளும் மூடப்படவேண்டும். அதேபோல் பிரதான சந்தைகளும் பூட்டப்படவேண்டும். அதற்குப்பதிலாக முன்னர் கொரோனா முதலாவது அலைவந்தநேரம் எப்படி மைதானம் வீதியின் இருமருங்கிலும் கடைகள் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டதோ அப்படி இன்று முதல் இயங்கவேண்டும்.

சகல மதவழிபாட்டுததலங்களும் மூடப்படவேண்டும். முக்கிய மதச்சடங்காக இருந்தால் குறித்த மதத்தலைவர் (பூசகர் பிக்கு மௌலவி போதகர்) ஓரிருவருடன் சமயச்சடங்கை நடாத்தலாம். வழிபாட்டிற்காக பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸில் வான்களில் நின்று பயணிப்பதற்கும் தடை. ஆசனத்தில் அமர்ந்து சுகாதாரநடைமுறைகளுடன் பயணிக்கவே அனுமதிக்கப்படும்.

மேலும் அம்பாறைக்கச்சேரியில் கொரோனா செயற்பாட்டு அறையொன்று 24மணிநேரமும் இயங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனர்த்தமுகாமைத்துஅதிகாரி பொலிஸ் சுகாதாரப்பிரிவினர் ஆகியோர் இருப்பர்.

ஓரிருதினங்களில் மாவட்டத்தில் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தத்தம் பிரதேச வளங்களுக்கேற்ப கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதிப்பதற்காக அவசரக்கூட்டத்தை கூட்டவேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

பிரதேசசெயலாளர் சுகாதாரவைத்தியஅதிகாரி உள்ளுராட்சிமன்றத்தலைவர் பொலிஸ்பொறுப்பதிகாரி ஆகியோர் சமுகத்துடன் இக்கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி கொரோனாப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைவர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு பிரதேசசெயலாளர் பிரிவிலும் உள்ள மக்கள் தகவல்தருபாவர்களாக மாறவேண்டும். யாராவது வெளியூரிலிருந்து வந்தால் உடனடியாக அறியத்தரவேண்டும். அதற்கான அறிவித்தலை பொலிசார் பிரதேசசெயலகத்தினர் பொதுமக்களுக்கு அறிவிக்கவேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :