பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து தடை



க.கிஷாந்தன்-
லவாக்கலை – டயகம பிரதான வீதியில் லிந்துலை - அகரகந்தை பகுதியில் (13.10.2020) அன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது.
இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் மற்றும் லிந்துலை பொலிஸார் ஆகியோர் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் மூன்று மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் டயகம, அக்கரப்பத்தனை, மெராயா ஆகிய பகுதிகளுக்கு சென்ற பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
அத்தோடு தொலைபேசி இணைப்புகள் மீது முறிந்து வீழ்ந்ததால் அப்பகுதிக்கான தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :