முஸ்லிம் தலைமைகள் வைராக்கியம் தாண்டி வாக்களிப்பார்களா?



ஆஸீம்-
ன்று இலங்கை முஸ்லிம் அரசியலில் ஓர் தீர்க்கமான நாளாக பார்க்கப்படுகின்றது. எங்களது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எவ்வாறான முடிவை எடுக்கப்போகின்றார்கள்? என்பதை முழு உலகமும் தங்களது கண்களை அகலவிரித்து நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.
பாரிய அரசியல் சதுரங்கம் அரங்கேறிவருகிறது. கட்சியா? முஸ்லிம்களின் இருப்பா? இன்று வெளிச்சத்துக்கு வரும்.

நலிந்துவரும் முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்கக வாக்களிப்பார்களா? அல்லது தங்களது அரசியல் வைராக்கியத்தை இன்னும் பட்டைதீட்ட வாக்களிக்கப் போகிறார்களா? ஆதரவாகவும் எதிராகவும் பட்டிமன்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

எதிராக வாக்களிப்பதனூடாக கிழக்கில் இதுகாலவரை இருந்துவரும் அரசியல் சமநிலைக்கு பங்கம் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. முழுமையான அரசியல் அதிகாரம் வியாளேந்திரன், பிள்ளயான் மற்றும் கருணா போன்றோரின் கைகளுக்கு மாறிச்செல்லும். இதன்காரணமாக திருகோணமலை முதல் கல்முனை வழியாக பொத்துவில் வரையாக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம்களுக்கு சாதகமற்றவிதத்தில் முடிவுகள் எட்டப்படலாம். அல்லது எதிர்பார்க்கும் தீர்வுகள் கிடப்பில் போடப்படலாம்.

இருபதில் தனியே முஸ்லிம்களுக்கு எதிரான சரத்துக்கள் இணைக்கப்பட்டுள்ளதாக இதுவரை எங்கும் விவாதிக்கப்படவில்லை.

பெரும்பான்மை சமூகத்திடம் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற மாயை சூசகமாக பரப்பப்பட்டு வருகின்றன.

அரசினூடாக முஸ்லிம் சமூகம் அடையவேண்டிய அபிவிருத்தி உள்ளிட்ட எத்தனையோ விடயங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

முஸ்லிம் தலைவர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகம் இன்னமும் சிங்கள பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து அந்நியப்படவேண்டுமா?

அரசியல் இது ஒரு மாபெரும் சந்தர்ப்பம் அதை துணிவுடன் பயன்படுத்தி சமூகம் வெற்றிபெற வாய்ப்பு ஏற்படுத்துவீர்களா?


தோற்பதா வெல்வதா தந்திரோபாய அரசியலுக்கு நீங்கள் தயாரா அல்லது முட்டிமோதி சின்னாபின்னமாகி சமூகத்தை சிதறடிக்கபோகிறீர்களா?

வைராக்கியம் தாண்டி பொறுப்புடன் செயற்படுங்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :