பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி : நடவடிக்கை எடுக்க சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் எதிர்க்கட்சி தலைவரிடம் கோரிக்கை.



நூருல் ஹுதா உமர்-
டந்த 06 வருடங்களாக கிழக்கு மாகாணம் அடங்களாக நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தில் 2000 மில்லியன் ரூபா நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காலை மாளிகைக்காடு பேர்ல்ஸ் மண்டபத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தவர்கள் முன்வைத்த குற்றசாட்டுக்களை அடிப்படையாக கொண்டு பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடனான கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கோரிக்கை முன்வைத்தார்.
நேற்று பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் தமது பிரதேசத்தில் நடைபெற்றிருக்கும் இம்மோசடியினால் பணத்தை வைப்புச்செய்த பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
சகல விடயங்களையும் செவியுற்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதால் இது தொடர்பிலான சகல ஆவணங்களையும் பெற்றுத்தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசிடம் கேட்டுக்கொண்டதுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :