மினுவங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா பரவியதன் இரகசியம் இதுதான்!

ஜே.எப்.காமிலா பேகம்-

டந்த செப்டம்பர் மாதம் இலங்கை வந்த துருக்கி விமான சேவைகள் நிறுவனத்தின் விமானத்தில் வந்த யுக்ரைன் பணிக்குழு மூலமே தொற்று இலங்கையில் பரவியுள்ளது.

குறித்த பணிக்குழு சீதுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளது.

இப்படி வெளிநாட்டு நபர்கள் தங்கினால் அங்குள்ள அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது கோவிட்-19 சட்டமாகும்.

இந்த ஹோட்டலில் உள்ள 60 பணியாளர்களின் அறைவாசிப்பேர் பொதுப்போக்குவரத்து மூலம் தினமும் தொழிலுக்கு வருபவர்கள்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியும் அவர்கள் தினமும் வீடுகளுக்கு சென்று வந்ததை கைவிடவில்லை.

அப்படி சென்று வருபவர்களில் ஒருவர் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இதுவே பெரும் பூகம்பமாக இலங்கையில் இரண்டாம் கட்ட கொரோனா புயலைக் கொண்டுவந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :