அட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம்


க.கிஷாந்தன்-

ட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கை அட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது.

அட்டன் நகரில் இன்று (25) காலை வரையில் 10 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கொரோனா ஒழிப்பு செயலணியால் அறிவிக்கப்பட்டது.

இதன்படி நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் எல்லாம் மூடப்பட்டன. அத்துடன் நகரை நோக்கி வருகை தந்திருந்த மக்களை வீடுகளுக்கு திரும்புமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.

அதன்பின்னர் அட்டன் நகரிலுள்ள சகல வீதிகளிலும், பஸ் தரிப்பிடம் உள்ளிட்ட பொது இடங்களிலும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு, தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :