வீட்டு பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டல் தொடர்பான விளக்கவுரை



ஹஸ்பர் ஏ ஹலீம்-
ட்டதாரி பயிலுனர்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனி அவர்களினால் வீட்டு பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டல் தொடர்பான விளக்கவுரை இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று (07) கிண்ணியா பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் போது பட்டதாரி பயிலுனர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பகுதிகளில் இணைப்பு செய்யப்பட்டு வீட்டுத் தோட்டம் மூலமாக பயிர்களை உருவாக்குவது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி கொவிட்19 தாக்கம் மீண்டும் வீரியம் எடுத்துள்ளதால் சுகாதார நடை முறைகளை பின்பற்றுவதுடன் முகக் கவசம் அணிய வேண்டும் .மக்களுக்காக கொவிட்19 தொடர்பில் விழிப்புணர்வினை பட்டதாரி பயிலுனர்கள் வீடு வீடாக செல்கின்ற போது தெளிவுபடுத்த வேண்டும். கொவிட்19 ல் இருந்து முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் பணிகளை முன்னெடுக்க அனைவரதும் ஒத்துழைப்பு தேவை அண்மையில் கம்பஹா, கொழும்பு போன்ற மாவட்டங்களில் இருந்து கிண்ணியா பகுதிகளுக்கு யாராவது வருகை தந்திருப்பின் உரிய பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :