நாடு மீண்டும் மூடப்படுமா? ஜனாதிபதி எடுத்த தீர்மானம் என்ன?



J.f.காமிலா பேகம்-
நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை சந்திப்பின்போது இந்த தீர்மானத்தை ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை நேற்றுமுன்தினம் நடந்தது.

இதன்போது கொரோனா தொற்றின் அதிவேக அச்சுறுத்தல் குறித்து நீண்டநேரம் பேசப்பட்டிருக்கிறது.
நாட்டை முழுமையாக முடக்குவது பற்றி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை வினவிய சந்தர்ப்பத்தில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக, தொற்று அதிகமாக உள்ள இடங்களை மாத்திரம் அடையாளங் கண்டு முடக்குவதே தற்போதைய தீர்மானம் என்பதையும் ஜனாதிபதி அமைச்சரவையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
இதேவேளை முன்னாள் அமைச்சரான பஸில் ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டமொன்று அலரிமாளிகையில் இடம்பெற்றிருக்கிறது.

கொழும்பில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துவருகின்றமை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :