மஹிந்தவுக்கு சூழ்ச்சி தேவையில்லை அவருக்கு அதிகாரமும் இல்லை-அலிசப்ரி

J.f.காமிலா பேகம்-

20ஆவது அரசியலமைப்புத் திருத்த யோசனை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த யோசனையை நீதியமைச்சர் அலிசப்ரி இன்று முற்பகலில் சபைக்கு சமர்பித்து உரையாற்றினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

“குறிப்பாக 1978ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பே மிகவும் பலம்வாய்ந்த அரசியலமைப்பாக காணப்படுகின்றது. 

இதுவரை இருந்த அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகளாக இருந்த போதிலும் ஏகாதிபத்திய ஜனாதிபதிகளாக இருக்கவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க குறுக்கு வழியாக 17ஆவது திருத்தம் மற்றும் 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களை தனக்கு பெற்றுக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் தற்போது கொண்டுவரப்படுகிற 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு அதிகாரங்கள் இல்லையா உள்ளதா என்பதை 11 வருடங்களாக பெயரளவு பிரதமராக இருந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவை விட 1000 மடங்கு சேவையை பிரதமர் செய்தார். அவருக்கு பொதுமக்களே அவருக்கு அதிகாரத்தை வழங்குவார்கள்.

 19ஆவது திருத்தத்தில் பல குறைகள் இருப்பதாக அதனை உருவாக்கிய ஜயம்பத்தியே ஏற்றுக்கொண்டதுடன் சுமந்திரனும் தெரிவித்திருந்தார். ஆகவே அதனை ஏன் இன்னும் வைத்திருக்க வேண்டும்? இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். அவருக்கு சூழ்ச்சிகளுடனான திருத்தங்களும் தேவையில்லை. அவருக்கே தற்போது அதிக பெறுமதி அதிகாரங்கள் வாய்ந்த அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

 20ஆவது திருத்த யோசனையில் சில திருத்தங்களையும் உள்வாங்கவுள்ளோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :