சம்மாந்துறை எல்லைகளினுாடாக வரும் வெளியூர் வியாபாரிகளை பதிவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கை ஆரம்பம்!


ஐ.எல்.எம் நாஸிம் -

ம்மாந்துறை எல்லைகளினுாடாக வரும் வெளியூர் வியாபாரிகளை பதிவு செய்து தொற்று நீக்கும் நடவடிக்கை ஒன்று இன்று (26) முதல் இடம்பெறுகின்றது.

சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ், சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம் மற்றும் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து கொவிட் 19 வைரஸின் பரவலை சம்மாந்துறையில் தடுக்கும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச எல்லையில் உள் நுழையும் வெளிப் பிரதேச வியாபாரிகளை இடைநிறுத்தி வியாபாரிகளையும், அவர்களது வாகனங்களையும் பதிவு செய்வதோடு தொற்று நீக்கி கிருமிநாசினியும் தெளித்து, உடல் வெப்பநிலையினையும் பரிசோதனை செய்து சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றமையினை உறுதிப்படுத்தி திகதியிட்ட வியாபார அனுமதி அட்டை " ஒன்றினை வழங்கும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முதல் சம்மாந்துறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக சம்மாந்துறை கொரோனா வைரஸ் தடுப்பு வழிநடாத்தல் குழுக் கூட்ட தீர்மானத்திற்கமைவாகவே சம்மாந்துறை பிரதேசத்தின் நுழைவாயில்களான நெல்லுப்பிடிச் சந்தி , வங்களாவடி , வீரமுனைச் சந்தி மற்றும் பள்ளாற்று சந்தி ஆகிய 4 இடங்களிலும் சோதனை சாவடிகளை மு.ப. 6.00 தொடக்கம் மு.ப. 10.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :