மியான்கல் குளம் பிரதேச விவசாயிகள் அமைப்பிற்கான புதிய நிருவாகிகள் தெரிவு



ஏறாவூர் நிருபர் எம்ஜிஏ நாஸர்-மட்டக்களப்பு- 

மியான்கல் குளம் பிரதேச விவசாயிகள் அமைப்பிற்கான புதிய நிருவாகிகள் தெரிவு ஒருமாதகால ஒத்திவைப்பின் பின்னர் பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் கிரான் கமநல சேவைகள் நிலைய வளாகத்தில் இன்று 06.10.2020 நடைபெற்றது.
இதன்போது விவசாயிகள் குழுவொன்று அதிகாரிகள் முன்னிலையில் மிகுந்த பரபரப்புடன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
கிரான் பிரதேசத்திலுள்ள 24 விவசாயிகள் அமைப்புக்களில் சுமார் எட்டாயிரம் விவசாயிகள் உள்ளனர். மியன்கல் குளம் பிரதேச அமைப்பில் 540 விவசாயிகள் அங்கம் வகிக்கின்றனர்.
இந்நிலையில் மியன்கல் குளம் விவசாயிகள் அமைப்பிற்கான புதிய நிருவாக சபைக்கு அதிகம் பேர் விண்ணப்பிக்காததனால் போட்டியின்றி தெரிவு நடைபெற்றது.
கிரான் கமநல அபிவிருத்திப்பிரிவிற்கான பொறுப்பு உத்தியோகத்தர் கே. ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் கே. ஜெயகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இப்புதிய நிருவாகத்தெரிவுக்கூட்டம் கடந்தமாதம் நடைபெற்றபோதிலும் இரு குழுவினருக்கிடையே ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு விவசாயியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் -- கிரான் கமநல சேவைகள் நிலையத்தில்; 2016 ஆம் ஆண்டில் விவசாய காணிக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச விண்ணப்பங்கள் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அதையடுத்து 420 ஏக்கர் அரச காணி தனியார் உடைமையாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இதுகுறித்து உரிய காலத்தில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும் விசாரணைகள் நடைபெறவில்லை.
அத்துடன் ஜனாதிபதி விசாரணைக்கான அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றார். மேலும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாதுள்ள காணிகளுக்கு 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான மானிய உரம் வழங்கி அரச நிவாரணத்தை துஸ்பிரயோகம் செய்ததாகவும் கூறினார். எனவே இதுதொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த விவசாயியின் கோரிக்கை தொடர்பில் மேலதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் விரைவான விசாரணை நடாத்தப்படுமென்றும் கிரான் கமநல அபிவிருத்திப்பிரிவிற்கான பொறுப்பு உத்தியோகத்தர் கே. ஜெயகாந்தன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :