காரைதீவில் கிராமங்களை சுத்தம் செய்யும் வேலை திட்டம்.

நூருள் ஹுதா உமர்-

ராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக, இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் "கிராமங்களை சுத்தம் செய்யும் வேலை திட்டம்"


இராணுவத்தினரும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து காரைதீவு பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பங்களிப்புடன் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 17 கிராம சேவகர் பிரிவுகளிலும் கிராமங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (04) இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி, உதவி பிரதேச செயலாளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ,பொது சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி பயனாளிகள், சமூக அமைப்புக்கள் என பலரும் இணைந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :