மஸ்கெலியாவில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது


தலவாக்கலை பி.கேதீஸ்-

ஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா,சாமிமலை நகரங்களிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவி கோவிந்தன் செண்பகவள்ளி தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் கங்கேவத்த பிரிவில் உள்ள 41 வயதுடைய நபர் ஒருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிந்தவர். இவர் கடந்த 17 ஆம் திகதி மஸ்கெலியா கங்கேவத்த பிரிவில் உள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்துள்ளார். 

அவர் அவ்வாறு வரும் வழியில் மஸ்கெலியா நகரில் பல இடங்களுக்கு சென்றுள்ள நிலையில் அவர் மீண்டும் திரும்பி போலியகொடை சென்றுள்ளார்.

 இந்நிலையில் அவரிடம் கடந்த 23ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் அவருடைய மனைவிக்கு 26.10.2020 மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கமைவாக அவருக்கு 27.10.2020 இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மஸ்கெலியா மற்றும் சாமிமலை வர்த்தக சங்கத்தினர் என்னிடம் மனு ஒன்றை கொடுத்து கேட்டுக்கொண்டதற்கிணங்க மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று (27.10.2020) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :