மலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு



க.கிஷாந்தன்-
லையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்று (23.10.2020) கண்காணிப்பு இடம்பெற்றது.
லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய லிந்துலை பொலிஸாரால் இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வாகன சாரதிகள், நடத்துனர்கள், பயணிகள் ஆகியோர் முகக்கவசம் அணிந்துள்ளனரா, வாகனங்களில் அனுமதிக்கப்பட்டளவுக்கான பயணிகள் பயணிக்கின்றனர். ஆட்டோ சாரதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் இதன்போது சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சாரதிகள், நடத்துனர்கள், பயணிகள் ஆகியோர் எச்சரிக்கப்பட்டதுடன், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
தலவாக்கலை, நுவரெலியா, நுவரெலியா – அட்டன், கதிர்காமம், தலவாக்கலை – டயகம, தலவாக்கலை – எல்ஜின் ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் வாகனங்களே இவ்வாறு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :