திடீர் ஊரடங்கு உத்தரவும் அல்லல்படும் மக்களும்..!

ன்று நள்ளிரவு தொடக்கம் 2ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுவதாக திடீர் அறிவித்தல் வெளியானதையடுத்து கொழும்பு நகரில் விற்பனை நிலையங்கள் மக்கள் முண்டியடிக்கத் தொடங்கினர்.

ஊரடங்கு உத்தரவு நேற்றுப் பிற்பகல் வெளியானதுமே கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது.

மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. சில பல்பொருள் விற்பனை நிலையங்களின் முன்பாக மக்கள் வரிசையில் நின்றிருந்ததைக் காண முடிந்தது.

இலங்கையில் கொரோனாவின் முதலாவது அலைத் தாக்கம் ஏற்பட்ட போது மக்கள் பொருட்களை வாங்குவதற்கு முண்டியடித்த காட்சியை நேற்றைய நிலைமை நினைவுபடுத்தியது.

சில கடைகளில் ஓரிரு மணி நேரத்துக்குள் அனைத்துமே விற்றுத் தீர்ந்து விட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :