சஜித்தை இனவாதியாக செயற்படவைக்க சுமந்திரன் முனைகின்றாரா? : ஹாதி இஸ்மாயில்.

நூருள் ஹுதா உமர்-

20வது திருத்தச் சட்டத்தின் மூலம் முஸ்லிம் சமூகம் சாதகங்களையா? அல்லது பாதகங்களையா? அனுபவிக்கும் என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்தின் மீது சேறு பூசி பிரதிநிதிகளையும் மக்களையும் பிரித்தாள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தந்திரோபாயங்களை கையாண்டு அறிக்கைகளை விடுவதை சமூகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். 

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக நலனுக்காகவே வாக்களித்திருப்பார்கள் என சமூகம் நம்புகிறது என மாற்றத்திற்கான முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஹாதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார். 

சமகால விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சட்ட நடவடிக்கை எடுக்க திணிப்பதற்கு அவர் அக்கட்சியுமில்லை, எந்த அருகதையுமில்லை. ஏனெனில் வட மாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் எந்தவித அறிக்கையும் விடாமல் மௌனியாக இருந்தவர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை திணித்து இனவாதியாக செயற்பட முனைகின்றாரா?

தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது போன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்ய வேண்டும் என நினைக்கின்றாரா?

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறுவது பொய்யா? அல்லது மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுவது பொய்யா ? யார் கூறுவது பொய் எனினும், யாராயினும் பொய் சொல்பவர் சமூகத்தை வழிநடாத்த தகுதியற்றவர்கள். அவர் யார் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள்.

நல்லாட்சி காலத்தில் முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்களையும் பொருளாதார இழப்புகளையும் கவனத்திற்கொண்டே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்திருப்பார்கள் என சமூகம் நம்புகிறது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :