திருகோணமலை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் ஆறு பேர் இனங்காணப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் பதற்றம்



எப்.முபாரக்-
திருகோணமலை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் ஆறு பேர் இனங்காணப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.ஊரடங்கு சட்டம் மீண்டும் பிறப்பிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதுடன் மக்களின் நடமட்டம் குறைந்துள்ளது.
தம்பலாகாமம்,கல்மெட்டியாவ,புல்மோட்டை,குச்சவெளி,மற்றும் திருகோணமலை பிரதேசத்தை அண்மிய கிராம சேவகர் பிரிவுகளான அபயபுரம்,அரசடி,சுமேதகம ஆகிய கிராமங்களில் உள்ளவர்களே இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே மக்கள் நடமாட்டத்தை தவிர்த்து இக்கிராமங்களுக்குள் உள்நுழைவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார பகுதியினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதேசத்தில் ஆறு பேர் இனங்காணப்பட்டதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் வி.பிரேமானந் தெரிவித்தார்.முதலாம் நபர் புல்மோட்டை குச்சவெளி பிராந்திய சுகாதார அத்தியட்சகர் பிரிவைச் சேர்ந்தவர் எனவும் இவர் கொழும்பு பேலியகொடை பகுதிக்கு சென்றதையடுத்து தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
திருகோணமலை பிரதேசத்தில் 61 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேவையற்ற முறையில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது மற்றும் பயணிப்பது போன்றவற்றை தவிர்த்துகொள்வதுடன் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை பேணுவது களியாட்டங்களை தவிர்த்துக்கொள்வது முக்கியமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :