மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஒரு முன்மாதிரி கல்முனை பிரதேச செயலகம்- வை ஹபிபுல்லா

சர்ஜுன் லாபீர்-

கல்முனை பிரதேச செயலகத்தில் வருடாந்தம் நடைபெறும் வாணிவிழா நிகழ்வு நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில்..

இத்தகைய வாணி விழாவினை கொண்டாடுவதில் மிக மகிழ்ச்சி அடைகின்றோம்.உண்மையில் இந்த விழா எந்த நோக்கத்திற்காக கொண்டாடப்படுகின்றன என்கின்ற விடயத்தை என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனாலும் இந்த கால கட்டாமானது பல்வேறுபட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் கூட கொரோனா எனும் இறுக்கமான நிலைமையிலும் இந்த நிகழ்வினை மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்த பிரதேச செயலகத்தில் நாங்கள் நடாத்திக்கொண்டு இருக்கின்றோம்.

இந்த நிகழ்வினை நடத்துவதற்கு அனுமதி வழங்கிய பிரதேச செயலாளருக்கு முதலில் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
ஏனெனில் இத்தருணத்தில் இப்படியான ஒன்றுகூடல்களை மேற்கொள்வது என்பது அசாத்தியமாக காணப்படுகின்ற போதும் கூட அந்த அசாத்தியமான நிலையிலும் சாத்தியமாக்கிய பெருமை கல்முனை பிரதேச செயலாளரையே சாரும்.

இந்த நிகழ்வின் நோக்கம் என்னவெனில் இது ஒரு மத நல்லிணக்கத்தின் முயற்சியாக இருந்துவிடக்கூடும் என்கின்ற நல்ல நோக்கமே! இந்த நிகழ்வுக்கான அனுமதியின் பின்னணியில் உள்ளது.இந்த நிகழ்வுகளின் ஊடாக வெறுமனே சம்பிரதாயத்தை செய்துவிட்டு செல்வதாக இருந்துவிடக்கூடாது மாறாக இன நல்லிணக்கத்திற்கு ஒரு தூண்டுதலாக காணப்படல் வேண்டும்.கல்முனை பிரதேச செயலகத்தில் இதனூடாக நல்ல செயற்பாடுகள் தொடரப்பட வேண்டும் என்ற பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்த நிகழ்வின் ஊடாக எதிர்பார்க்கின்ற ஒற்றுமை,ஒழுக்கம் மற்றும் மனங்களுக்கு இடையில் அமைதி போன்றவற்றை நாங்கள் மெருகூட்ட வேண்டிய சூழ் நிலைக்கு எம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கடப்பாடு நம்மில் உள்ளது.

பொதுவாக எல்லா மதங்களும் நல்லிணக்கம் சம்மந்தமாகவும், நல்லவைகள் சம்மந்தமாகவும் தான் நமக்கு கருத்துக்களை சொல்கின்றது. ஆனால் அந்த மாதங்கள் வெறிகளாக கொள்கின்ற போதுதான் மனிதம் செத்துவிடுகின்றது எனவே மதங்கள் எல்லாம் வழிகளாகவும், மார்க்கங்களாகவும் அமைய வேண்டும் அந்த மார்க்கங்கள் சொல்லுகின்ற நல்ல விடயங்கள் நமது வாழ்க்கையில் இருக்க வேண்டும்.நாங்கள் இன்று பார்க்கின்றோம் மதங்கள் என்ற போர்வையிலே பல அசிங்கமான செயற்பாடுகள் அதன் பின்னணியில் இடம்பெறுவதால் எத்தனையோ மனங்களுக்கிடையில் அது விரிசல்களை ஏற்படுத்துகின்றது.எந்தவொரு மதமும் மனிதர்களிடத்தில் விரிசல்கள் ஏற்படுவதற்கு இடம்கொடுப்பதில்லை.

அந்த அடிப்படையில் இக்கட்டான இன்றைய காலகட்டத்தில் நாம் இந்த வாணிவிழாவினை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றோம். நாம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து இந்த நிகழ்வினை கொண்டாடுகின்றோம் எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற மும்மதங்களை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வினை நடத்திக்கொண்டு இருப்பது ஏனைய பிரதேச செயலகங்களுக்கு முன்மாதிரியான எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது.

எமது பிரதேச செயலகம் ஒரு முன்மாதிரியான பிரதேச செயலகமாகும்.ஆனால் வெளியிலே மக்களின் தோற்றப்பாடு கல்முனை பிரதேச செயலகம் என்றால் மாற்று மதங்களுக்கு இடம்கொடுப்பதில்லை அவர்களை அடக்குமுறைக்கு உட்படுத்துகின்ற செயற்பாடு போன்ற ஒரு பிழையான கருத்தாடலை எமது சமூகத்தில் தோற்றுவித்து இருக்கின்றது. ஆனால் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்பதற்கு இது ஒரு சான்றாக அமையும்.என்று நான் நம்புகின்றேன்.

ஏனென்றால் நாங்கள் இங்கு நண்பர்களாக ஒன்றுமையாக எவ்வித வேறுபாடும் இல்லாமல் கடமையாற்றுகின்றோம்.ஆனால் வெளியில் உள்ளவர்கள் கல்முனை பிரதேச செயலகம் என்பது முஸ்லிம்கள் மாத்திரம் கடமைபுரிவதற்கு உரித்தான பிரதேச செயலகம் என்றும் ஏனையவர்களுக்கு இங்கு எந்தவொரு சலுகைகளும் வழங்கப்படுவதில்லை என்ற கருத்துக்கள் தான் இன்று இலங்கையில் மேலோங்கி நிற்கின்றது. ஆனால் அந்த கருத்துக்களுக்கு அப்பால் இப்படியான இக்கட்டான சூழ்நிலையிலும் கூட மிக சொற்பமான தமிழ் சகோதரர்களை கொண்டுள்ள இந்த செயலகத்தில் இந்த நிகழ்வுக்கு அனுமதித்தது என்பது பெரிய எண்ணம் கொண்ட ஒரு நிறுவன தலைவரினால் மட்டுமே முடியும். எனவே இந்த சந்தர்ப்பத்தை வழங்கி இத்தகைய நல்ல நிகழ்வு பிரதேச செயலகத்தில் அரங்கேறுவதற்கு உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எல்லோருக்கும் பொதுவான இறைவன் ஒத்துழைப்பு வழங்குவான் என்று கேட்டு முடிக்கின்றேன் என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :