இலங்கையில் மூடப்பட்ட அரச அலுவலகங்கள்!

J.f.காமிலா பேகம்-

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அரச வௌியிட்டு பணியகம் நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மூடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அரச அச்சகத் திணைக்களத்தின் பதிப்பக பகுதியும் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் மூடப்படுவதால் குறித்த திணைக்களத்தின் சேவைகளை இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென கம்பனிகள் பதிவாளர் நாயகம் டி.என்.ஆர். சிறிவர்தன அறிவித்துள்ளார்.

கம்பனிகளை பதிவு செய்தல், சங்கங்களை பதிவு செய்தல், பொது ஒப்பந்தங்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை இணைய வழி மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த திணைக்களத்தின் சேவைகளை www.drc.gov.lk எனும் வலைத்தளத்தின் ஊடாகவும் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும் என கம்பனிகள் பதிவாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

கம்பனிகளை பதிவு செய்தல் – 011 – 2689616, தகவல் தொழிநுட்ப பிரிவு – 011-2689239, பொது ஒப்பந்தங்களை பதிவு செய்தல் – 011-2689215 எனும் இலக்கங்களின் மூலம் குறித்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :