அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே ரிசாதின் கைது முயற்சி-இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு.


எப்.முபாரக் -

ரசின் மீது அதிருப்தி அடைந்துள்ள கடும்போக்குவாதிகளை திருப்திபடுத்தும் அரசியல் நாடகமே ரிசாதின் கைது முயற்சி என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார் கொழும்பில் செவ்வாய்கிழமை(13) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்:

நாட்டை சர்வதிகாரத்துக்கு இட்டுச்செல்லும் இருபதாம் திருத்த சட்டத்துக்கு பௌத்த பீடங்களே எதிர்ப்பு தெரிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.கத்தோலிக்க ஆயர் பேரவையும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. 

அத்துடன் ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை அரசை ஆதரித்த கடும்போக்குவாதிகள் மத்தியில் அரசின் மீது பாரிய சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.

எனவே அரசுக்கு எழுந்துள்ள இவ்வாறான எதிர்ப்புக்களை திசைதிருப்பி கடும்போக்குவாதிகளை திருப்திப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை கைது செய்யும் நாடகம் ஒன்றை அரங்கேற்ற அரசு முயற்சிக்கிறது.இந்த அரசியல் பழிவாங்கல்களில் இருந்து அவரை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாம் அவருக்கு துணையாக நிற்போம்.

தற்போது பொருட்களின் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளன. பிழையான பொருளாதார கொள்கையால் இதை சமாளிக்க முடியாமல் அரசாங்கம் அவதியுறுகிறது.

எமது அரசாங்கம் அதிகரித்த பத்தாயிரம் ரூபா சம்பளத்தை கொண்டே அரச ஊழியர்கள் இந்த பொருளாதார நெருக்கடிக்குள்ளும் தமது வாழ்வை கொண்டுசெல்கின்றனர். ஆனால் கூலி தொழில் செய்யும் மக்களின் நிலையே கவலைக்கிடமாக உள்ளது. எமது அரசு பெற்றோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தமையாலேயே அவர்களுக்கும் ஒரு வேளையாவது உண்ண கிடைக்கிறது.


ஐம்பது கொரோனா நோயாளிகள் அடையாளம் கானப்பட்டபோதே நாட்டை முடக்கினார்கள். ஆனால் இன்று ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் அடையாளம் காணப்பட்டும் இதுவரை தொற்றில் இருந்து ஏனையவர்களை பாதுகாக்க தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :