வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே!


டபிள்யூ.டிக்க்ஷித்-

லிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சிறுவர்கள் எமது கைவந்து சேரும் வரை சிறுவர்கள் தினம் எமக்கு கரி நாளே என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்தார்.

இன்று(01) திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

10 வருடத்திற்கு முன்பு யுத்தத்தின் போது சரணடைந்த எங்கள் குழந்தைகள் எங்கே? சிறுவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய வேண்டிய இலங்கை அரசு எமது சிறார்களை காணாமல் ஆக்கியுள்ளது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் இலங்கை அரசிற்கு என்ன செய்தார்கள்? போன்ற கேள்விகளை இதன் போது எழுப்பினார்.

மேலும் இவ்வாறானதொரு நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காகவே இவ் சிறுவர் தினத்தை கரிநாளாகவும் தங்களுக்கு சிறுவர் தினம் இல்லை எனவும் பிரகடப்படுத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

இதன் போது இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் நீதி கோரி மகஜர் ஒன்றை மின்னஞ்சல் ஊடாக ஐ.நா உயர் ஆணையாளர் அவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள், சிறுவர்கள், ஊடகவியலார்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :