சாதாரண நோயுள்ளவர்கள் வைத்தியசாலைக்கு வரவேண்டாம் - மீராவோடை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம்!

எச்.எம்.எம்.பர்ஸான்-

சாதாரண நோயுள்ளவர்கள் மருந்து எடுக்க வைத்தியசாலைக்கு வரவேண்டாம் என ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்கள் குறித்த பிரதேசத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதால் பொதுமக்களை பாதுகாக்க வேண்டியே இத் தீர்மானம் வைத்தியசாலை நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் சாதாரண நோய்களான கடுப்பு, வலி, கை கால் குத்து, முகத்தில் புள்ளிகள், அல்சர், கடி, பூச்சிக்கு மருந்தெடுத்தல் போன்ற சிறுசிறு நோய்களுக்காக வைத்தியசாலைக்கு வந்து பாரிய நோய்களை தொற்றிக் கொள்ளாமல் முடிந்தளவு அனைவரும் பாதுகாப்பாக வீட்டினுள் இருந்து கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :