கல்முனை சந்தாங்கேனி மைதான நில அபகரிப்புக்கு ஆளுனர் ஊடாக முற்றுப்புள்ளி வைத்தார் றிஸ்லி முஸ்தபா!


பீ.எம்.றியாத் சாய்ந்தமருது-

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் எம்.ஆர் பெளடேசனின் தலைவர் றிஸ்லி முஸ்தபா மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் இடையேயான நேரடி சந்திப்பு நேற்று 15 ஆம் திகதி ஆளுனர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது கல்முனை சந்தாங்கேனி மைதான நில அபகரிப்பு தொடர்பாகவும் அதன் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி மற்றும் கல்முனை தொகுதி உள்ளக வீதி அபிவிருத்தி, சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிரு


த்தி, இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பு,இளைஞர் கழகம் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், சாய்ந்தமருது பொலிவோரியன் விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு நிதியுதவி செய்து தருவதாகவும் வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

மேலும் மாளிகைக்காடு பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பாக கரையோர பாதுகாப்பு திணைக்கள தவிசாளரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :