மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்ததும் விடயத்தில் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார் - மாகாண பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவிப்பு



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படும். இதற்கு எந்த சவாலையும் நான் எதிர்கொள்ளத் தயார் என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்தார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் 2020 ஆம் ஆண்டுக்கான ஏ.எல் தின விழா இன்று (01.10.2020) பாடசாலை முதல்வர் ஏ.எல்.சக் காப் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்

மாகாண பணிப்பாளர் தொடர்ந்து உரையாற்றுகையில், மருதமுனைக் கிராமத்தைப் பொறுத்தளவில் இரண்டு மத்திய கல்லூரிகள் உள்ளன. ஸம்ஸ் மத்திய கல்லூரி மற்றயது அல்-மனார் மத்திய கல்லூரி இந்த இரண்டு பாடசாலைகளுக்கும் இடையிலான போட்டி மனப் பாங்கு இந்தப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளது. அந்த வகையில் ஸம்ஸ் மத்திய கல்லூரியின் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

இந்தப் பாடசாலையின் தேவையான ஒரு ஆராதனை மண்டபத்தை கட்டுவதற்காக நான் முன்னர் மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்த போது 25 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தேன். ஆனால் பின்னர் அந்த நிதி எமது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட உயர் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டு மறை கரங்களால் இல்லாமல் ஆக்கப்பட்டது. இது எனக்கு ஒரு கவலை தரும் விடயமாகும். சில வேளை இந்த குறைபாடுகளை இல்லாமல் செய்வதற்கு என்னை இறைவன் மீண்டும் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுத்தானோ தெரியவில்லை.
2020 திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைக்கு அதிசிறந்த ஆராதனை மண்டபம் ஒன்று கிடைக்கும். தற்போது பாடசாலையில் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸம்ஸ் மற்றும் அல்மனார் இந்த இரண்டு பாடசாலைகளினதும் தேசிய பாடசாலை முதல் பட்டியல் விவகாரம் வந்தபோது சிலர் என்னிடம் வந்து சிரஷ்டத் துவம், கனிஸ்டத்தும் பற்றி பேசினார்கள்.
சிரஷ்டத்துவம், கனிஸ்டத்தும்துவம் என்பதற்கப்பால் இந்தப் பாடசாலைகள் அடைந்து அடைவுகளை மதிப்பீடு செய்து தேசிய பாடசாலை வழங்குவதாக இருந்தால் எந்த விமர்சனம் வந்தாலும் அதனை எதிர்கொண்டு இந்த மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த நான் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.

ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு நியாயமான காரணங்கள் ஆராயப்பட்டு தீர்ப்பு வழங்குவது போல இந்த பாடசாலையை தேசிய பாடசாலையாக உருவாக்குவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு.
மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் பாடசாலையின் நன்மதிப்பையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் மாணவர்களின் காலடியில் பாடசாலை நல்ல பண்பாடுகளை ஒழுக்கங்களையும் சிறந்த பெறுபேறுகளையுமே எதிர்பார்க்கின்றது.
இதனை இன்று இந்த பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற மாணவர்கள் பாடசாலையின் பெயருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :