இம்போட்மிரர் செய்திக்குப் பலன் -சாய்ந்தமருதில் வெள்ள அபாயம் கல்முனை மாநகர சபையினர் களத்தில்..!

நூருல் ஹுதா உமர்-

நேற்றிரவு சில மணி நேரமாக பெய்த பெரு மழையினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் தோணாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அபாயத்தையடுத்து, கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையிலான கல்முனை மாநகர சபையினர் துரிதமாக செயற்பட்டு, அவர்களது நேரடி கண்காணிப்பில் சாய்ந்தமருது முகத்துவாரம் தோண்டப்பட்டு, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பலத்த மழையும் இடி, மின்னலுமாக அபாயகரமான காலநிலையிலும் மாநகர முதல்வருடன் மாநகர சபை உறுப்பினர்களான எம்.வை.ஜெளபர், முஹர்ரம் பஸ்மீர், கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.கே.எம்.அர்ஷத் காரியப்பர், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே.காலிதீன் உட்பட மாநகரசபை ஊழியர்கள் பலரும் ஸ்தலத்தில் நின்று துரித நடவடிக்கைகளில் பங்கேற்றிருக்கின்றனர்.

இத்துரித நடவடிக்கைகளினால் இப்பகுதிகளில் பாரிய வெள்ள அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது

கிளிக்:


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :