டெங்கு ஒழிப்பை கட்டுப்படுத்தும் முகமாக கல்முனையில் மாபெரும் சிரமதானம்


எம்.என்.எம்.அப்ராஸ்-


சுற்று சூழலை சுத்தமாக வைத்திருப்பது அனைவரின் கடமையாகும் இதற்கமைய
கல்முனை பகுதியில்
டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக ,தேசிய டெங்கு ஒழிப்பு வார்த்தை முன்னிட்டு
கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் பணிப்பாளர் ஜி .சுகுணன்அவர்களின்
வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ. றிஸ்னி அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை கிரீன்ஃபீல்ட் வீட்டுத்திட்டத்தில் மாபெரும் சிரமதானப் பணி
இன்று(18) முன்னெடுக்கப்பட்டது

கல்முனை தெற்கு சுகாதார பணிமனை மற்றும் கல்முனை பிரதேச செயலகம் கல்முனை மாநகர சபை மற்றும் பொதுமக்கள் ஆகியோர்ஒன்றிணைந்து இவ் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இதன் போது
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஐ.றிஸ்னி அவர்களினால் டெங்கு நோய் பரவும் வழிமுறைகள் இதனை நாம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்
மற்றும் பொது மக்கள் சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி இங்கு பொது மக்களுக்கு தெளிவூட்டினார்.

பொது மக்கள் அதிகாரிகள் ஒன்றினைந்து சுற்று புறத்தில் காணப்பட்ட கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு சூழல் சுத்தம் செய்யப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :