முகக்கவசங்களுடன் உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு வருகைதந்த பரீட்சாத்திகள்.

நூருல் ஹுதா உமர்-

கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்த பரீட்சைகள் இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சாத்திகள் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 485 பேர் புதிய பாடத்திட்டத்திலும் 43 ஆயிரத்து 339 பேர் பழைய பாட திட்டத்திலும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

புதிய பாடத்திட்டத்தில் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 580 பேர் பாடசாலை மூல பரீட்சாத்திகளாவர். எஞ்சிய 41 ஆயிரத்து 905 பேர் தனியார் பரீட்சாத்திகளாவர்.

உயர்தர பரீட்சைகளுக்காக நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 316 ஒருங்கிணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பேணி முகக்கவசம் அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு வருகைதந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :