கொழும்பு முடக்கம் -நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் இரத்து!

கொ
ழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகங்களையும் மீள அறிவிக்கும் வரையில் மூடுவதற்காக தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களின் ஊடாக கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மேல் மாகாணத்திலும், காலி பிரதான தபால் காரியாலயம் மற்றும் அதன் உப தபால் அலுவலகங்கள் உட்பட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடிதம் விநியோகித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய தபால் பரிமாற்றத்தின் நடவடிக்கைகளும் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :