இறை தூதருக்கு கேலிச்சித்திரம் வரைந்த வரலாற்று ஆசிரியருக்கு நடந்த விபரீதம்.


முகம்மத் இக்பால்-


றை தூதர் முஹம்மது நபி அவர்களை கேலி சித்திரம் வரைந்து மாணவர்களுக்கு கற்பித்த சாமுவேல் என்னும் வரலாற்று ஆசிரியர் ஒருவர் நேற்று பிரான்சின் தலைநகரான பாரிசில் முஸ்லிம் மாணவர் ஒருவரினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் செச்சிநியாவை பூர்வீகமாகக்கொண்ட பதினெட்டு வயது முஸ்லிம் மாணவனே அவ்வாறு வரலாற்று ஆசிரியரை கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதனை ஒரு பயங்கரவாத சம்பவம் என்று பிரான்ஸ் அரசு கூறியுள்ளதுடன் குறித்த மாணவனின் பெற்றோர்கள் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது வகுப்புக்கு வருகைதந்த குறித்த ஆசிரியர் தான் ஒரு விடயத்தை கற்பிக்கப்போவதாகவும், அது அதிர்ச்சியளிக்கும் விடயமாக இருக்குமென்றும், இங்கே முஸ்லிம் மாணவர்கள் இருந்தால் வெளியேறி செல்லலாம் என்றும் குறித்த ஆசிரியர் குறிப்பிட்டதாகவும்

பின்பு ஒரு நிருவாண கேலிச்சித்திரத்தை காண்பித்து இது முகம்மது நபியென்று கூறி விளக்கமளித்ததனால் முஸ்லிம் மாணவர்கள் மட்டுமன்றி ஏனைய சமயங்களை சேர்ந்த மாணவர்களும் ஆசிரியரின் இந்த செயலை கண்டித்ததாகவும், பின்பு இதனை பெற்றோர்களுக்கு அறிவித்து அவர்களும் சமூக வலைத்தளங்களில் குறித்த ஆசிரியருக்கு எதிரான கண்டனங்களை பதிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஒரு முஸ்லிம் மாணவன் குறித்த ஆசிரியரின் செயலுக்கு தண்டனை வளங்கும்பொருட்டு வீதியில்வைத்து கத்தியால் கழுத்தை வெட்டி துண்டித்து கொலை செய்துள்ளார்.

விடயம் அறிந்து சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்தனர். போலிசாரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக ஓடியபோது பொலிசாரின் துப்பாக்கி தாக்குதலுக்கு இலக்காகி குறித்த முஸ்லிம் மாணவன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் ஆசிரியரை கொலை செய்வதற்கு முன்பே குறித்த மாணவன் தனது டுவிட்டரில் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளார்.

உலகில் உள்ள உண்மையான ஒவ்வொரு இஸ்லாமியனும் தனது உயிருக்கு மேலாக மதிக்கின்ற இறைதூதர் முகம்மது நபி அவர்களை கேலி செய்தால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :