நீதிமன்ற வழக்குகள் பிற்போடப்பட்டுள்ளது!

எஸ்.எம்.எம்.முர்ஷித், ஜே.எப்.காமிலா பேகம்-

வா
ழைச்சேனை பொலிஸ் பிரில் கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்க சட்டத்தினை அடுத்து வாழைச்சேனை மாவட்ட ஃ நீதவான் நீதி மன்றில் இந்த வாரம் நடைபெற இருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக வாழைச்சேனை மாவட்ட  நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஷீல் தெரியப்படுத்தியுள்ளதாக நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக வாழைச்சேனை பிரதேசத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளதையடுத்து இந்த வாரம் இடம்பெற இருந்த வழக்குகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.

இந்தவாரம் நடைபெற இருந்த வழக்குகளின் மாற்றப்பட்ட புதிய திகதிகள் நீதி மன்றத்திற்கு முன்னாள் உள்ள விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட  நீதவான் நீதி மன்ற பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன்:
கொழும்பில் தற்போது ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவிருந்த  கொழும்பு உச்ச நீதின்ற வழக்குகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :