கிழக்கில் நான்கு வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சைக்குத்தயார்!



கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன்!
காரைதீவு நிருபர் சகா-
கிழககு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று வைத்தியசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் கரடியனாறு வைத்தியசாலை கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை மற்றும் அம்பாறையில் பதியத்தலாவ வைத்தியசாலை ஆகிய கொவிட் 19 சிகிச்சை நிலையங்களாக மாறறப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திகலாநிதி டாக்டர் அழகையா .லதாகரன் தெரித்தார்.

கிழக்கில் நான்கு வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தமை தெரிந்ததே.
மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே மேற்படி வைத்தியசாலைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

கரடியனாறு கொவிட்19 சிகிச்சை நிலையத்திற்கு நேற்று 42பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய சிகிச்சை நிலையங்கள் சனிக்கிழயைன்று தமது பணிகளை ஆரம்பிக்கும் என்றார்.
அவர் கூறுகையில் 'நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையால் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்தியசாலை வசதிகள் அதிகமாக தேவைப்படுகின்றன.
இதற்கமைய நாட்டிலுள்ள சகல மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகள் பலவற்றை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கு சுகாதார அமைச்சு முடிவுசெய்து வைத்தியசாலைகளைத் தெரிவு செய்துள்ளது.

இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்தால் மேலும் பல வைத்தியசாலைகளை இவ்வாறு கொரோனா சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றியமைக்க சுகாதார அமைச்சு முடிவுசெய்துள்ளது' என அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :