தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு & ‘பொலிஸ் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு’ –நொப்கோ



செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் பணிக்குழு உறுப்பினர்களின் அமர்வு நொப்கோ வளாகத்தில் நொப்கோவின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது. குறித்த அமர்வில் சுகாதாரத் துறையில் உள்ள ஒரு சில நிபுணர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

நொப்கோ தலைவரின் வரவேற்புக் குறிப்பின் பின்னர் பணிக்குழு அமர்வில் , மதிப்பிடப்பட்ட முன்னேற்றங்கள், மீண்டும் மீள்பார்வையிட்ட புதுப்பிப்புகள், புதிய சாத்தியமான தொற்றுக்கள் மற்றும் தற்போதைய முன்னேற்றங்களை அடுத்து நாட்டில் தொற்றுநோயின் ஒட்டுமொத்த நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. நெரிசலான நடமாட்டங்கள் மற்றும் சமூக ஒன்றுகூடல் மற்றும் சில நபர்களின் பொறுப்பற்ற நடத்தை உள்ளிட்ட விடயங்கள் வைரஸ் பரவுவதற்கான காரணம் என கூறிய உறுப்பினர்கள், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.

வெவ்வேறு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை ‘பொலிஸ் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு’ மற்றும் சுய தனிமைப்படுத்தும் நடைமுறைகளுக்காக கிராம மட்டங்களில் ‘தனிமைப்படுத்துதல்’ ஊரடங்கு உத்தரவு விதிக்க அனைவரும் குறித்த அமர்விர் தீரமானிக்கப்பட்டது.அதன்படி, ஒரு முறை கண்டுபிடிக்கப்பட்ட பாதிப்பாளர்களின் கொத்தணிகள் ‘தனிமைப்படுத்தல்’ மூலோபாயத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து எழுமாற்றாக இனங்காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றைய இடங்களுக்கு நகர்வைபொலிஸ் ஊரடங்கு உத்தரவின் கீழ் தடைசெய்யப்பட வேண்டும். முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட முதல் தொடர்புகளில் கிட்டத்தட்ட 91 சதவிகிதம் மிகப்பெரிய வெற்றியை நிரூபித்தது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது, இதற்காக முப்படையினருக்கு எங்கள் பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்க வேண்டும். அந்த நடைமுறைகள் ஏற்கனவே பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் விரைவான நடவடிக்கை எடுப்பதில் காத்திரமாக இருந்த சுகாதாரத் துறையின் தொற்றுநோயியல் பிரிவின் அசாத்தியமான பாத்திரங்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார், மற்றும் அதன் அடுத்தடுத்த ஒரு கண்டறிதல் பதிவாகவில்லை. "அவர்களின் பாத்திரங்கள் மிகச்சிறந்தவை, நாங்கள் ஒரு சிறப்பு நன்றி சொல்ல வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற நடைமுறைகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் எதிர்காலத்தில் வெளிநாட்டவர்கள் தொடர்ந்து நாட்டிற்கு வருவது குறித்து ஜனாதிபதியிடம் ஆலோசிக்கவும் அவர் விரும்பினார். எதிர்காலத்தில் வரும் வெளிநாட்டவர்கள் பி.சி.ஆர் சோதனைகள், தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள், தங்குமிடம் போன்றவற்றின் செலவுகளை பொறுப்பெடுக்கு வேண்டியிருக்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்குச் செல்ல தேவையான அனைத்து உதவிகளும், பெரும்பாலும் ஹோட்டல்களும் சரியான ஒருங்கிணைப்பு மூலம் விமான நிலையத்தில் கிடைக்கும்.

பி.சி.ஆர் சோதனைகள், மருந்துகள் விநியோகம் ,வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தொற்றாளர்களின் அதிகரிப்பு மற்றும் தணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அங்கு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் அவர்கள் விளக்கமளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :