கொரோனா தொற்றாளர் சென்ற இரண்டு பார்களுக்கு பூட்டு- அட்டன் நகரமும் இரண்டாம் நாளாக வெரிச்சோடியது


நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-

கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்ற இரண்டு மதுபானசாலைகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்கள் சுயதனிமைக்குற்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கொட்கலை, டிரேட்டன் பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானத்தையடுத்து அவர் கந்தகாடு மருந்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந் நிலையில், குறித்த நபர் கொட்டக்கலை நகரிலுள்ள இரண்டு மதுபானசாலைகளுக்கு சென்றுள்ளமை தெரிய வந்ததையடுத்து இரண்டு மதுபானசலைகளும் சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவர்கள் சுயதனிமைக்குட்;படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அட்டன் நகரம் சுய தனிமைப் பிரதேசமாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா நேற்று அறிவித்த நிலையில் அட்டன் நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு அட்டன் - டிக்கோய நகரபையினால் கிருமி நாசினி தெளிகப்பட்டதுடன், இன்று இரண்டாவது நாளாகவும் அட்டன் நகரம் மூடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :