பட்ஜட் நேரம் நாடாளுமன்றில் அரங்கேறப்போகும் பல்டிகள்



J.f.காமிலா பேகம்-
திரணியைச் சேர்ந்த மேலும் சில எம்.பிக்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் எனவும், இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளது எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் நவம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்படும் ‘பட்ஜட்’டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே எதிரணி உறுப்பினர்கள், மொட்டு அரசுடன் சங்கமிக்கவுள்ளனர்.
இதில் சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த 8 எம்.பிக்களில் இருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எம்.பியொருவருக்கும், தமிழ் எம்.பியொருவருக்குமே இவ்வாறு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியை வகிக்கும் சமல் ராஜபக்ச ராஜாங்க அமைச்சு பதவியொன்றையும் வகிக்கின்றார். அந்த அமைச்சு கைமாறும். அதேபோல இராஜாங்க அமைச்சராக இருக்கும் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :