புறக்கோட்டையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு PCR பரிசோதனை


J.f.காமிலா பேகம்-

கொ
ழும்பு – புறக்கோட்டை பகுதியில் இன்று 100க்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புறக்கோட்டையின் குணசிங்கபுர பேருந்து தரிப்பிடம் மற்றும் 4ஆம் குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 180 பேருக்கு இவ்வாறு PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் மூன்று பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கொழும்பு – மத்துகம பேருந்து நடத்துனரின் மூலமாக இவர்களுக்கு கொரோனா பரவியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவண் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மூவர் உள்ளடங்கலாக புறக்கோட்டை பகுதியில் இதுவரை ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த ஐவருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களுக்கே குறித்த PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனை அடுத்து, புறக்கோட்டை பகுதியில் வர்த்தக நிலையமொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :