வறுமையை ஒழிக்க அனைவரின் பங்களிப்பு மிக அவசியமானதாகும் -எம்.எஸ்.எம்.சப்ராஸ் SDO

சர்ஜுன் லாபீர், எம்.என்.எம்.அப்ராஸ்-

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கிற்கமைய
சர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு
நாடு பூராகவுமுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களை சுயபலத்தின் ஊடாக கூடிய வருமானம் பெறுவோர்களாக ஆக்கும் பொருட்டு
சமுர்த்தி நிவாரணம் பெறுவோரின்
சமகால நிலைமையினை இனங்காணும் வேலைத்திட்டத்தின்
கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் மனைப் பொருளாதார அலகினை பலப்படுத்தும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது

இதற்கமைய கல்முனை தெற்கு
சமூர்த்தி வலய வங்கி முகாமையாளர் மோஸஸ் புவிராஜ் தலைமையில் இந் நிகழ்வுகள் (21)
இடம்பெற்றது

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாயாற்றுகையில் மாவட்ட பணிப்பாளர் இவ்வாறு கருத்து தெரிவித்தார் அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்
நாங்கள் மாற்றத்துக்கு
உரிய முகவர்களாக
மாற வேண்டும் சமூர்த்தி என்பது முத்திரை வழங்கும் திட்டம் அல்ல மாறாக தங்கி வாழ்பவர்களே உருவாக்கக்கூடிய திட்டமும் அல்ல இது முயற்சியாளர்களாக மாற்றகூடியதொன்றாகும்

இதற்காய் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முயற்சியாண்மை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக மாற வேண்டும் .இதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியும்

வறுமை ஒழிப்பு ஆனது என்னாளோ பிரதேச செயலாளராலோ சமூர்த்தி உத்தியோகத்தராலோ தனியாக செய்யக்கூடிய வேலை திட்டம் அல்ல இது ஒரு கூட்டு வேலைத் திட்டமாகும் இதற்கு எல்லோரின் பங்களிப்பும் மிக அவசியமானதாகும்

எதிர்வரும் வருடம் சமூர்த்தி திணைக்களத்தினால் பாரிய வேலைத் திட்டங்கள் நடை முறைபடுத்தப்படவுள்ளது இதற்கமைய இவ்வாறான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது
என்றார்.

மேலும் இதன் போது சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களுக்கு
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கொடுப்பணவகள் வழங்கல் ,
வீட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த
வீட்டுத் தோட்ட பயிர் செய்கை கன்றுகள் வழங்கப்பட்டதுடன்
சமூர்த்தி சீட்டிழுப்பு நிதியத்தின் கீழ் வெற்றி பெற்ற பயனாளிகளுக்கு வருமான கருத்திட்ட பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது மேலும் இதன்போது கலந்துகொண்ட உயர் அதிகரிகள் கெளரவிக்கப்பட்டனர் .
கல்முனை பிரதேச செயலாளர்
எம்.எம் நஸீர் ,
கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ் ,
சமூர்த்தி திட்ட முகாமையாளர் எ.எம் எஸ் நயீமா,சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ரிபாயா, மருதமுனை, நற்பிட்டிமுனை முகாமையாளர் எம்.எம் முபீன்,உதவி முகாமையாளர்களான எஸ்,எல் அஸீஸ்,எம் ரி தெளபீக்,எம்.எம்.எம் மன்சூர்,சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :